அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) ஏற்பாடு செய்த கௌமாரபிருத்யா குறித்த 3வது சர்வதேச மாநாட்டை (KAUMARACON-2026) குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்.
இதன் கருத்துரு “Shaping the Future of Child Health: Global Perspectives, Research Innovations, and Clinical Frontiers in Kaumarabhritya” என்பதாகும்.
கௌமாரபிருத்யா என்பது குழந்தை பராமரிப்பு, ஊட்டச்சத்து, வளர்ச்சி, மேம்பாடு மற்றும் நோய் தடுப்பு தொடர்பான ஆயுர்வேதப் பிரிவாகும்.
ஆயுஷ் புத்-தொழில் இணையதளம், AIIA-iCAINE இணையதளம், ஆயுடிவா, வமனா செயலி மற்றும் பஞ்சகர்மா மதிப்பீட்டுச் செயலி ஆகியவை தொடங்கப்பட்டன.
சமஸ்கிருதத்தில் பஞ்சகர்மா என்றால் "ஐந்து செயல்கள்" என்று பொருள், இது நச்சுகளை அகற்றி வாதம், பித்தம் மற்றும் கபத்தைச் சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆயுர்வேத சிகிச்சை முறையாகும்.