TNPSC Thervupettagam

க்ருஹா லட்சுமி டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் வலை தளம் – கர்நாடகா

January 20 , 2026 14 hrs 0 min 16 0
  • கர்நாடகா, பெண் தொழில்முனைவோர் தயாரித்த தயாரிப்புகளை இயங்கலை தளம் மூலம் ஊக்குவிப்பதற்காக க்ருஹா லட்சுமி டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் வலை தளத்தினை அறிமுகப்படுத்தியது.
  • இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் செயல்படுத்தப்படும் ஒரு மாநில அரசின் முன்னெடுப்பாகும்.
  • பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் இணைய வணிகச் சந்தையை இந்த தளம் வழங்குகிறது.
  • இது பெண்கள், குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் மற்றும் கைவினைஞர்கள், உள்ளூர் சந்தைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் பொருட்களை விற்க உதவுகிறது.
  • இந்த முன்னெடுப்பு கர்நாடகாவில் பெண்கள் தொழில்முனைவு, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் வருமானம் ஈட்டுவதை ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்