க்ருஹா லட்சுமி டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் வலை தளம் – கர்நாடகா
January 20 , 2026 3 days 35 0
கர்நாடகா, பெண் தொழில்முனைவோர் தயாரித்த தயாரிப்புகளை இயங்கலை தளம் மூலம் ஊக்குவிப்பதற்காக க்ருஹா லட்சுமி டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் வலை தளத்தினை அறிமுகப்படுத்தியது.
இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் செயல்படுத்தப்படும் ஒரு மாநில அரசின் முன்னெடுப்பாகும்.
பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் இணைய வணிகச் சந்தையை இந்த தளம் வழங்குகிறது.
இது பெண்கள், குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் மற்றும் கைவினைஞர்கள், உள்ளூர் சந்தைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் பொருட்களை விற்க உதவுகிறது.
இந்த முன்னெடுப்பு கர்நாடகாவில் பெண்கள் தொழில்முனைவு, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் வருமானம் ஈட்டுவதை ஆதரிக்கிறது.