எலோன் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, க்ரோகிபீடியா எனப்படும் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் இயங்கலை வழி தகவல் தரவுத் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
விக்கிபீடியாவைப் போன்ற பயனர் இடைமுகம் கொண்ட இந்தத் தளமானது, பயனர்கள் குறிப்பிட்ட தலைப்புகளைத் தேட, பாடங்களை ஆராய, துணைப் பிரிவுகளுக்குச் செல்ல மற்றும் மேற்கோள் காட்டப்பட்ட அறிக்கைகளை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கிறது.
உரிமம் பெற்ற படங்கள், பல் ஊடகக் கூறுகள், தொடர்புடைய தலைப்புகளுக்கான ஹைப்பர்லிங்க்குகள், தகவல் வரைபலகைகள் மற்றும் வெளிநாட்டு மொழி சார் கட்டுரைகள் தற்போது க்ரோகிபீடியாவில் கிடைக்கப்பெறவில்லை.
க்ரோகிபீடியா ஒரு திறந்த, இலவசமான மூலமாகும் என்பதோடு, மேலும் பயனர்கள் புதியக் கட்டுரைகளைச் சேர்த்தல், திருத்தங்கள் அல்லது நீக்குதல்களைக் கோரலாம்.