ஐரோப்பிய ஒன்றியமானது தனது முதன்மையான மனித உரிமைகள் பரிசை பெலாரஸின் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்விட்டலனா டிஸ்கானோஸ்கயா என்பவருக்கு வழங்கியுள்ளது.
இது அந்நாட்டு அதிபர் அலெக்சாந்தர் லுகாசென்கோவின் நீண்ட கால கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான அவரது மிக நீண்ட நெடிய போராட்டத்திற்காக வேண்டி அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
லுகாசென்கோ பெருமளவில் மோசடி செய்து அதிபர் தேர்தலில் 6வது முறையாக வெற்றி பெற்றுள்ளதாக பெரும்பாலும் கூறப் படுகின்றது.
சகாரோவ் பரிசானது மனித உரிமைகள் மற்றும் சுதந்திரமான சிந்தனைகள் ஆகியவற்றின் பாதுகாப்பிற்காக வேண்டி தங்களது வாழ்வை அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை கௌரவிக்கின்றது.