சக்கர அச்சு கணக்கீட்டு அமைப்பு மூலம் இரயில் தண்டவாள இருப்பு குறித்த அறிவிப்பு
November 4 , 2023 662 days 330 0
மத்திய இரயில்வே நிர்வாகமானது, மும்பை கோட்டத்தின் வாசிந்த்-அசங்கன் பிரிவில் சக்கர அச்சு கணக்கீட்டு அமைப்பு (BPAC) மூலம் இரயில் தண்டவாள இருப்பு குறித்த அறிவிப்பினை வழங்கும் அமைப்பை நிறுவி இயக்கியுள்ளது.
இரயில் இயக்கங்களின் உச்சகட்ட பாதுகாப்பினை பேணுவதில் BPAC அமைப்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
குறிப்பாக, இது ஒரு பிரிவின் பாதையில் பயணிக்கும் முந்தைய வாகனத்தை கவனமாக ஆராய்ந்து, மற்றொரு இரயில் அந்தப் பாதையில் நுழைவதற்கான அனுமதியினை வழங்குவதற்கு முன், அந்தப் பாதையில் எந்தவொரு இரயிலும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
முன்னதாக, BPAC அமைப்பு ஆனது கல்யாண்-இகத்புரி பிரிவில் உள்ள வாஷிந்த் இரயில் நிலையம் வரை பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்பட்டது.