சக்தி அறிஞர்கள் புத்தாய்வு மாணவர் உதவித் தொகை திட்டம்
December 27 , 2025 14 days 60 0
தேசிய மகளிர் ஆணையம் ஆனது சக்தி அறிஞர்கள் புத்தாய்வு மாணவர் உதவித் தொகை திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது 21 முதல் 30 வயதுடைய இளம் இந்திய ஆராய்ச்சியாளர்களை ஆதரிப்பதற்காக ஆறு மாத மானிய அடிப்படையிலான ஆராய்ச்சி புத்தாய்வு மாணவர் உதவித் தொகை திட்டம் ஆகும்.
பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதார அதிகாரமளித்தல், தலைமைத்துவம், இணைய வெளிப் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகள் போன்ற பெண்கள் சார்ந்தப் பிரச்சினைகள் குறித்த கொள்கை சார்ந்த, பலதரப்பட்ட ஆராய்ச்சிக்கு இந்தப் புத்தாய்வு மாணவர் உதவித் தொகை திட்டம் 1 லட்சம் ரூபாய் வழங்குகிறது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் என்பதோடுமேலும் அது தொடர்புடைய துறைகளில் முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் (M.Phil) அல்லது முனைவர் பட்டம் (PhD) பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது.
பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கும் முன்னேற்றம் தொடர்பான ஆராய்ச்சி செயல் படுத்தலை உறுதி செய்வதற்கும் நிதி வழங்கீடானது பல்வேறு கட்டங்களாக வழங்கப் படுகிறது.
இந்த உதவித்தொகை இந்தியாவில் பெண்களுக்கான ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் ஆதரவுக் கொள்கை மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.