சக்தி திட்டம் – உத்தரப் பிரதேசம்
October 23 , 2020
1679 days
1058
- உத்தரப் பிரதேச மாநில அரசானது 6 மாத கால அளவுள்ள பெண் அதிகாரமளிப்புத் திட்டமான “சக்தி திட்டம்” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
- 6 மாத கால அளவுள்ள இந்தப் பிரச்சாரமானது “சக்தி திட்டம்” மற்றும் “சக்தி நடவடிக்கை” என்ற 2 நிலைகளைக் கொண்டிருக்கும்.
- இந்த முன்னெடுப்பானது அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றத்தைக் கையாளுவதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காவும் தொடங்கப்பட்டுள்ளது.
- இது பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைக் கொண்டு உள்ளது.
- சக்தி நடவடிக்கையின் கீழ், அம்மாநிலக் காவல் துறையானது பெண்களுக்கு எதிராக குற்றம் புரிந்து, சிறைத் தண்டனை பெற்று தற்பொழுது வெளியில் வந்துள்ள நபர்களின் பதிவேட்டைத் தயாரிக்க உள்ளது.
Post Views:
1058