சித்திரவீணை கலைஞர் என். ரவிகிரணுக்கு "சங்கீத கலாநிதி" விருது வழங்கப்பட்டுள்ளது. மியூசிக் அகடமி வழங்கும் மழலை மேதைகளுக்கான உதவித்தொகையினை 1996 ஆம் ஆண்டு பெற்றவர் ரவிகிரண்.
டிசம்பர் 15 முதல் ஜனவரி 1 வரை நடைபெறும் மியூசிக் அகாடமியின் 91ஆவது ஆண்டு மாநாட்டுக்கு என். ரவிகிரண் தலைமை தாங்குவார். அவருக்கு ஜனவரி 1-ஆம் தேதி நடைபெறும் சதஸ் விழாவில் விருது வழங்கப்படும்.
சதஸ் விழாவின் இந்த ஆண்டிற்கான முக்கிய விருதுகள்
சங்கீத கலா ஆச்சார்யா விருது
-> மிருதங்கம் கலைஞர் - வி. கமலாகர் ராவ்
-> பாடகர் - ராதா நம்பூதிரி
டிடிகே (TTK Awards)விருதுகள்
-> ஓதுவார் பாரம்பரியத்தைச் சேர்ந்த முத்து கந்தசாமி தேசிகர்
-> கடம் கலைஞர் - சுகன்யா இராமகோபால்
இசை வல்லுனர் விருது
டி.எஸ். சத்தியவதி
பப்பு வெங்கடராமையா விருது
திருவள்ளூர் பார்த்தசாரதி
ஜனவரி 3, 2018 இல் நடக்கும் நாட்டிய விழாவில் பரதநாட்டிய கலைஞர் லட்சுமி விஸ்வநாதனுக்கு நாட்டியத்துக்கான "நிருத்ய கலாநிதி விருது" வழங்கப்படுகிறது.
சங்கீத கலாநிதி
கர்நாடக இசையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு மியூசிக் அகாடமி ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது. இதில் மிக உயரிய விருதாக கருதப்படுவது "சங்கீத கலாநிதி" விருது ஆகும். சங்கீத என்பதற்கு "இசை" என்றும் கலாநிதி என்பதற்கு பெருஞ்செல்வம் என்பதும் பொருள்.