TNPSC Thervupettagam

சங்கை திருவிழா 2025

November 27 , 2025 16 hrs 0 min 7 0
  • சங்கை திருவிழா என்பது மணிப்பூரின் வருடாந்திரக் கலாச்சார விழாவாகும்.
  • மணிப்பூரின் மாநில விலங்காக இருக்கும் சங்காய் மானின் பெயர் கொண்டு இதற்கு இந்தப் பெயரிடப்பட்டது என்பதோடு இது மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தை குறிக்கிறது.
  • இந்த விழாவின் முக்கிய ஈர்ப்பு ஆனது இம்மாநிலத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார ஊடுருவலை வலியுறுத்துவதற்காக நிகழ்த்தப்படுகின்ற மணிப்பூரின் பாரம்பரிய நடன வடிவமான ராஸ் லீலா (இராசலீலை) ஆகும்.
  • லோக்டாக் ஏரியின் மிதக்கும் ஃபும்டிஸில் அமைந்துள்ள கெய்புல் லாம்ஜாவோ தேசியப் பூங்காவில் மட்டுமே காணப்படும் இந்த அருகி வரும் சங்காய் மான்களின் வளங்காப்புத் தேவைகள் குறித்து கவனத்தை ஈர்ப்பதையும் இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது IUCN அமைப்பினால் மிகவும் அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது என்பதோடு மேலும் 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் முதலாம் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்