சச்சரவுகளின் போதான பாலியல் வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் – ஜுன் 19
June 21 , 2019 2273 days 573 0
ஜுன் 19 அன்று சச்சரவுகளின் போதான பாலியல் வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இத்தினத்தை பறைசாற்றியது.
இத்தினம் உலகெங்கிலும் பாலியல் வன்கொடுமைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவற்றில் இருந்து மீண்டு உயிர் வாழ்பவர்களைக் கௌரவிப்பதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
மேலும் இந்தக் குற்றங்களை ஒழிப்பதற்காக எதிர்த்து நின்று போராடி உயிர் நீத்தவர்கள் மற்றும் துணிவுடன் தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்கள் ஆகியோர்களுக்கு இத்தினம் மரியாதை செலுத்துகின்றது.