மத்திய அரசானது இந்தி மொழியிலும், 21 பிராந்திய மொழிகளிலும் சஞ்சார் சாத்தி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் செயலியானது பயனர்கள் சந்தேகத்திற்கிடமான தகவல்தொடர்புகளைப் புகாரளிக்கவும், தொலைந்து போன/திருடப்பட்ட தொலைபேசிகளின் செயல் பாட்டினை நிறுத்தவும் அல்லது கண்காணிக்கவும் மற்றும் அங்கீகரிக்கப்படாத சில இணைப்புகளைச் சரிபார்க்கவும் உதவுகிறது.
இந்தச் செயலியானது ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டதிலிருந்து 46 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு சார்ந்த இணையவெளி மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியப் பங்குதாரர்களுடன் புது டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த மறு அறிமுகம் மேற்கொள்ளப்பட்டது.