TNPSC Thervupettagam

சஞ்சார் சாத்தி செயலி

December 5 , 2025 14 hrs 0 min 27 0
  • இந்தியாவில் உள்ள அனைத்துப் புதிய திறன் பேசிகளிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவுவதை தொலைத்தொடர்புத் துறை கட்டாயப்படுத்தியுள்ளது.
  • இந்தச் செயலியானது அனைத்து தொலைத்தொடர்பு வலையமைப்புகளிலும் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகளை முடக்கப் பயனர்களை அனுமதிக்கிறது.
  • இது பயனர்கள் தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து கைபேசி இணைப்புகளையும் குறித்து அறிய அனுமதிக்கிறது.
  • கூடுதலாக, மோசடி தொடர்பான அழைப்புகள், குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் செய்திகள் குறித்து புகாரளிக்க சக்சூ விருப்பத் தேர்வினை இந்தச் செயலி கொண்டு உள்ளது.
  • இந்த முன்னெடுப்பின் மூலம் தொலைத்தொடர்பு வளங்களை தவறாகப் பயன்படுத்துவதை தடுப்பதையும், இணையவெளிப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்