தேசிய இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான நிறுவனமான சங்கீத நாடக அகாடமி (Sangeet Natak Akademi - SNA) சஞ்சி முஜ் மெய்ன் கலாகார் என்ற இணையதள பரப்புரையின் இரண்டாவதுத் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது.
இது நேரடியான மக்கள் பங்களிப்பின் மூலம் தொட்டுணர முடியாத கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பன்முகத் தன்மை உடைய கலாச்சார விழுமியங்களையும் ஊக்குவித்து ஆவணப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகும்.
சங்கீத நாடக அகாடமி
கலாச்சார பன்முகத் தன்மையைப் பாதுகாக்கவும் நாட்டின் பல்வேறுபட்ட கலாச்சார விழுமியங்களையும் உணர்வுகளையும் பரப்பி மேம்படுத்துவதில் தொடர்புடைய விவகாரங்களான தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரியத்தையும், பல்வேறுபட்ட யுனெஸ்கோ ஒப்பந்தங்களையும் ஒருங்கிணைப்பதற்கான இந்திய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் ஒரு ஒப்புதல் அமைப்பே சங்கீத நாடக அகாடமி ஆகும்.