நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் பிரதம அமைச்சருக்கான பொருளாதார ஆலோசகர் சபையின் ஒரு முழு நேர உறுப்பினராக சேர்க்கப் பட்டுள்ளார்.
இவர் 2 ஆண்டுக் காலத்திற்கு இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசகச் சபையானது, பொருளாதார விடயங்கள் பற்றிப் பிரதமருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மத்திய அரசினால் நிறுவப்பட்ட ஒரு தன்னியக்க அமைப்பாகும்.