சட்ட நாள் / அரசியலமைப்பு நாள் - நவம்பர் 26
November 27 , 2020
1722 days
910
- அரசியலமைப்பு நாளானது 'சம்விதன் திவாஸ்' என்றும் அழைக்கப்படுகிறது.
- இது 1949 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதை நினைவு கூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
- 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு நிர்ணயச் சபையானது இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது.
- இது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது.
- 2015 ஆம் ஆண்டு முதல் இது அனுசரிக்கப் பட்டு வருகின்றது.
- 2015 ஆம் ஆண்டு என்பது அம்பேத்கர் அவர்களின் 125வது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டமாகும்.
- இந்திய அரசியலமைப்பு என்பது உலகின் எந்தவொரு இறையாண்மை கொண்ட நாட்டிலும் மேற்கொள்ளப்பட்ட ஒரு மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பாகும்.

Post Views:
910