சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு (திருத்தம்) மசோதா – 2019
August 4 , 2019 2110 days 737 0
பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு (திருத்தம்) மசோதாவை நிறைவேற்றி இருக்கின்றன.
இது 1967ம் ஆண்டின் UAPA (Unlawful Activities (Prevention) Act) சட்டத்தைத் திருத்தம் செய்கின்றது.
சில அமைப்புகளையும் தீவிரவாத அமைப்புகளாக நிர்ணயிக்கப்படுவதையும் சேர்த்து இம்மசோதா தனிநபர்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க அரசிற்கு அனுமதி அளிக்கின்றது.
முன்னதாக வழக்குகளின் விசாரணை காவல்துறையின் இணை கண்காணிப்பாளர் அல்லது காவல்துறையின் துணை ஆணையர் அல்லது அதற்கும் மேல் தகுதிநிலை கொண்ட அதிகாரிகளாலேயே நடத்தப்பட்டு இருக்கும்.
இம்மசோதா கூடுதலாக அவ்வகையிலான வழக்குகளை தேசிய விசாரணை அமைப்பின் ஆய்வாளர் அல்லது அதற்கும் மேல் தகுதிநிலை கொண்ட அதிகாரிகள் விசாரிக்க அனுமதி அளிக்கின்றது.
முன்னதாக தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதல்களைக் தடுத்தல் ஒப்பந்தம் (1997) மற்றும் பிணைக் கைதிகளாக்கும் செயலுக்கு எதிரான ஒப்பந்தம் (1979) உள்ளிட்ட 9 ஒப்பந்தங்களுக்கு எதிரான செயல்கள் தீவிரவாதச் செயல்களாக சித்தரிக்கப்பட்டன.
இந்த திருத்தம் மேலும் ஒரு ஒப்பந்தமாக, அணு ஆயுதத் தீவிரவாதச் செயல்களைத் தடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தையும் (2005) உள்ளடக்குகின்றது.
1967ம் ஆண்டுச் சட்டத்தின் படி ஒரு விசாரணை அதிகாரி தீவிரவாதத்தோடு தொடர்புடையதாக கருதப்படும் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய டிஜிபியின் முன் அனுமதியைப் பெறுவது கட்டாயத் தேவையாக இருக்கின்றது.
தற்பொழுது இவ்விசாரணை தேசிய விசாரணை அமைப்பின் அதிகாரியால் மேற்கொள்ளப்படுமெனில் தேசிய விசாரணை அமைப்பின் பொது இயக்குனரிடமிருந்து இத்தகையச் சொத்துக்களைக் கைப்பற்ற அனுமதி பெற வேண்டியிருக்கும் என இத்திருத்தம் சொல்கின்றது.