சட்டக் கல்லூரிகளில் திருநர்களுக்கான இடஒதுக்கீடு – கேரளா
November 10 , 2025 56 days 94 0
அனைத்து மாநிலச் சட்டக் கல்லூரிகளிலும் திருநர் சமூக மாணாக்கர்களுக்கு இரண்டு கூடுதல் /சூப்பர்நியூமரரி இடங்களை ஒதுக்கும் கேரள அரசின் முன்மொழிவை இந்திய வழக்குரைஞர் கழகம் (BCI) அங்கீகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட கேரள உயர்நீதி மன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
கேரள அரசானது, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 ஆம் தேதியன்று மூன்று ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டு LLB படிப்புகளுக்கு இந்த நடவடிக்கையை அறிமுகப்படுத்த முன் மொழிந்தது.
2025 ஆம் ஆண்டு கேரள சட்ட நுழைவுத் தேர்வில் (KLEE) தகுதி பெற்ற ஒரு திருநர் தேர்வாளர் இந்த வழக்கினைத் தொடுத்தார், ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது.
இந்த ஒப்புதல் உச்ச நீதிமன்றத்தின் NALSA தீர்ப்பு (2014) மற்றும் திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.