TNPSC Thervupettagam

சட்டசபை தேர்தல் 2022

January 11 , 2022 1265 days 530 0
  • உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்தர காண்ட் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன.
  • இந்த 5 மாநிலங்களிலும் பிப்ரவரி 10 அன்று தொடங்கி ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப் பட்டு மார்ச் 10 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10, பிப்ரவரி 14, பிப்ரவரி 20, பிப்ரவரி 23, பிப்ரவரி 27, மார்ச் 3 மற்றும் மார்ச் 7  என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
  • பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14 அன்று தேர்தல் நடைபெறும்.
  • மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 03 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
  • மொத்தம் 690 சட்டசபைத் தொகுதிகளில் அடுத்த 2 மாதங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
  • அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் (403 தொகுதிகள்), பஞ்சாப் (117 தொகுதிகள்),  உத்தர காண்ட் (70), மணிப்பூர் (60) மற்றும் கோவா (40) ஆகிய இடங்களில் தேர்தல் நடத்தப் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்