முதன்முறையாக, பணியாற்றிக் கொண்டிருக்கும் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மத்திய சட்டத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனூப் குமார் மெண்டிராட்டா என்பவர் புது தில்லியில் உள்ள கர்கார்டூமா நீதிமன்றங்களில் வடகிழக்கு மாவட்டத்தின் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகத் தற்பொழுது பணியாற்றுக் கொண்டிருக்கின்றார்.
2023 ஆம் ஆண்டு மார்ச் 23 வரை ஒப்பந்த அடிப்படையில் இப்பதவிக்கு மெண்டிரட்டா நியமிக்கப் பட்டுள்ளார்.
பொதுவாக, செயலாளர் (சட்ட விவகாரங்கள் மற்றும் சட்டமன்றத் துறை) பதவிகள் இந்தியச் சட்டச் சேவைப் பணி அதிகாரிகளால் நிரப்பப் படுகின்றன.