தேசிய சட்டச் சேவைகள் அமைப்பானது இந்தியா முழுவதும் உள்ள 365 மாவட்ட சட்டச் சேவை ஆணையங்களில் சட்ட உதவிப் பாதுகாப்பு ஆலோசனை அமைப்பை (LADCS) தொடங்கியுள்ளது.
இது முழு நேர அளவிலான சட்ட உதவி வழக்கறிஞர்களைக் கொண்டுள்ளது.
சட்ட உதவிப் பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு என்பது குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு குற்றவியல் விசாரணைகளில் தங்களைத் தற்காத்துக் கொள்ள இலவசச் சட்ட உதவியை வழங்குகின்ற, தேசிய சட்டச் சேவைகள் அமைப்பினால் நிதி அளிக்கப் படும் ஒரு திட்டமாகும்.
தேசிய சட்டச் சேவைகள் அமைப்பானது 1987 ஆம் ஆண்டு சட்டச் சேவைகள் ஆணைய சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
சமூகத்தின் பலவீனமானப் பிரிவினருக்கு இலவசச் சட்ட சேவைகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.