முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளத்தை மூன்று மடங்காக உயர்த்துவதற்கான மசோதாவை ஒடிசா மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றியது.
திருத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ், ஒரு சட்டமன்ற உறுப்பினர் மாதத்திற்கு 3.45 லட்சம் ரூபாய் பெறுவார் என்ற நிலையில்இது 2007 ஆம் ஆண்டில் 1.10 லட்சம் ரூபாயாக இருந்தது.
முதலமைச்சரின் மாத சம்பளம் 3.74 லட்சம் ரூபாய் என்பதோடுஇதில் 1 லட்சம் ரூபாய் சம்பளம், 91,000 ரூபாய் கார் பயன்பாடு சார்ந்த கொடுப்பனவு மற்றும் 1.83 லட்சம் செலவுக் குறைப்பு கொடுப்பனவு ஆகியவை அடங்கும்.
துணை முதல்வர் 3.68 லட்சம் ரூபாய், அமைச்சரவை அமைச்சர்கள் 3.62 லட்சம் ரூபாய் மற்றும் மாநில அமைச்சர்கள் மாதம் 3.56 லட்சம் ரூபாய் பெறுவார்கள்.
சபாநாயகரின் சம்பளம் 3.68 லட்சம் ரூபாய், துணை சபாநாயகரின் சம்பளம் 3.56 லட்சம் ரூபாய், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசாங்கத் தலைமை கொறடாவின் சம்பளம் 3.62 லட்சம் ரூபாய் ஆகும்.
ஒடிசாவின் தனி நபர் வருமானம் ஆண்டிற்கு 1,82,548 ரூபாய் ஆகும் என்பதோடுஇது தேசிய சராசரியான 2,05,324 ரூபாயை விடக் குறைவாகும்.