ஜம்மு & காஷ்மீரின் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை சட்டவிரோதமான அமைப்பாக அறிவிப்பதற்கு போதுமான காரணங்கள் உள்ளனவா என்பதனைத் தீர்மானிக்க டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியான குப்தா தலைமையிலான தீர்ப்பாயம் ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகமானது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act-UAPA) கீழ் இந்த தீர்ப்பாயத்தினை அமைப்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
நீதிபதி குப்தா தற்போது இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்தினை சட்டவிரோதமான சங்கமாக நீட்டிக்கப்படுவதற்கு போதுமான காரணங்கள் உள்ளதா என்பதை உறுதி செய்ய UAPA-வின் கீழ் அமைக்கப்பட்ட மற்றொரு தீர்ப்பாயத்திற்கு தலைவராக உள்ளார்.