சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, சாலைகள் மற்றும் நடைபாதைத் தளங்களில் உள்ள சட்டவிரோதப் பதாகைகள், வளைவுகள், பதாகைகள் மற்றும் நெகிழ்வுப் பலகைகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இது போன்ற கட்டமைப்புகளை அகற்றத் தவறுவது அதிகாரிகளின் கடமை தவறுதல் மற்றும் அலட்சியத்திற்குச் சமம் என்று நீதிமன்றம் கூறியது.
இந்த உத்தரவானது, காவல்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பொருந்தும்.