சட்டவிரோதமான, அறியப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்கான சர்வதேச தினம் - ஜூன் 05
June 10 , 2024 340 days 157 0
இத்தினமானது கடல் சார் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு சட்டவிரோத முறையிலான மீன்பிடித்தல் ஏற்படுத்தும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் மத்தியத் தரைக் கடலுக்கான பொது மீன்பிடி ஆணையம் ஆனது இந்த நாளை அனுசரிப்பதற்கான ஒரு முன்னெடுப்பினைத் தொடங்குவதற்காக முன்மொழிந்தது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளுக்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.
ஐக்கிய நாடுகள் சபையானது 2022 ஆம் ஆண்டினை சர்வதேச கைவினைஞர் மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்புக்கான ஆண்டாகவும் அறிவித்தது.
சட்டவிரோதமான, அறியப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற (IUU) மீன்பிடித்தல் கடல் சார் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது.