TNPSC Thervupettagam

சட்லஜ் யமுனா இணைப்புக் (SYL) கால்வாய்

January 29 , 2020 1983 days 882 0
  • சட்லஜ் - யமுனா இணைப்புக் கால்வாய் (SYL கால்வாய்) என்பது பஞ்சாபில் உள்ள சட்லஜ் நதியை ஹரியானாவில் உள்ள யமுனைக் கால்வாயுடன் இணைப்பதற்காக முன்மொழியப்பட்ட 214 கி.மீ நீளம் கொண்ட ஒரு நீர் வழிப் பாதையாகும்.
  • பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கிடையேயான SYL பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்து வைக்குமாறு மத்திய அரசிற்கு இந்திய உச்ச நீதிமன்றமானது அண்மையில் உத்தரவிட்டது.
  • இந்த உத்தரவின் காரணமாக இந்த இரு மாநிலங்களுக்கிடையேயான நீர்ப் பகிர்வு தொடர்பான சர்ச்சைக்குரிய பிரச்சினையானது மத்திய அரசால் முக்கியமான நிலைக்குக் (சுமூகமான தீர்வு) கொண்டு வரப்பட்டுள்ளது.
  • 1966 ஆம் ஆண்டில் பழைய (பிரிக்கப்படாத) பஞ்சாபிலிருந்து ஹரியானா உருவாக்கப்பட்டது. அதன் பிறகு ஹரியானாவுக்கு நதி நீரில் அதன் பங்கைக் கொடுக்கும் பிரச்சனை ஆரம்பமானது.
  • ராவி மற்றும் பியாஸ் நதி நீரை ஹரியானாவுடன் பகிர்ந்து கொள்வதை பஞ்சாப் மாநிலம் எதிர்த்துள்ளது. ஹரியானா மாநிலத்திற்கு தண்ணீர் கொடுக்கும் அளவிற்கு தன்னிடம் தண்ணீர் இல்லை என்று பஞ்சாப் மாநிலம் வாதிட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்