TNPSC Thervupettagam

சதுப்பு நில முதலை எண்ணிக்கை

January 21 , 2026 10 hrs 0 min 22 0
  • சமீபத்திய முதலை கணக்கெடுப்பு ஒடிசாவின் சிமிலிபால் தேசியப் பூங்காவில் முதலை எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காட்டியது.
  • 2025 ஆம் ஆண்டில் 81 ஆக இருந்த மொத்த முதலை எண்ணிக்கை 2026 ஆம் ஆண்டில் 84 ஆக அதிகரித்தது.
  • தியோ நதியில் 60 முதலைகளுடன் அதிக எண்ணிக்கை பதிவானது.
  • கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்கா, சுமார் 2,750 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு உள்ளது.
  • இந்தப் பூங்கா 2009 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலக உயிர்க்கோளக் காப்பக வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
  • புத்தபலங்கா மற்றும் தியோ போன்ற முக்கியமான ஆறுகள் இந்தப் பூங்கா வழியாகப் பாய்ந்து முதலை வாழ்விடங்களை ஆதரிக்கின்றன.
  • முதலை எண்ணிக்கையில் அதிகரிப்பு, இராம்தீர்த்த சதுப்பு நில முதலை இனப் பெருக்க மையத்திலிருந்து வெளியிடப்படுவதுடன் தொடர்புடையது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்