சதுர கிலோமீட்டர் தொகுப்பு ஆய்வகம் (Square Kilometer Array Observatory – SKAO) எனும் மாபெரும் அறிவியல் திட்டத்தில் பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டினை உறுதி செய்வதற்கான ஒரு இடைக்கால ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தமானது ஓராண்டு காலம் வரை செல்லுபடியாகும்.
SKAO திட்டமானது உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியாக திகழும்.
SKAO திட்டத்தின் கட்டுமானக் கட்டத்தில் இந்தியா தனது முதல் நிதிப் பங்களிப்பினை வழங்குவதற்கு இத்திட்டம் வழிவகை செய்யும்.
SKAO ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் நிறுவப்பட உள்ளது.