TNPSC Thervupettagam

சத்தீஸ்கரில் கலைமான்களின் மீட்சி

April 7 , 2026 15 hrs 0 min 62 0
  • சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு சத்தீஸ்கரில் கலைமான்கள் மீண்டும் வந்துள்ளன, இப்போது சுமார் 130 விலங்குகள் காடுகளில் உள்ளன.
  • கடைசியாக 1927 ஆம் ஆண்டில் காணப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த இனம் வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடுதல் காரணமாக மறைந்துவிட்டது.
  • 2018 ஆம் ஆண்டு பர்னவாபாரா வனவிலங்கு சரணாலயத்தில் டெல்லி மற்றும் கானன் பெண்டாரி உயிரியல் பூங்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட 77 கலைமான்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தும் பணி தொடங்கியது.
  • இந்தப் பாதுகாப்புத் திட்டம் 1972 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பழக்கப் படுத்துதல், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது.
  • சுமார் 60 கலைமான்கள் இன்னும் அடைப்புகளில் உள்ள நிலையில் மேலும் பலவற்றை விடுவிக்க அரசு திட்டமிட்டுள்ளது, அத்துடன் சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் உள்ள கோமர்தா வனவிலங்கு சரணாலயத்திற்கும் இது விரிவு படுத்தப்பட உள்ளது.
  • கலைமான் (ஆன்டிலோப் செர்விகாப்ரா) IUCN செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப் படக் கூடிய இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்