இந்திய ராணுவமானது, லடாக் ஒன்றியப் பிரதேசத்தில் சத்பவனா நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது.
பள்ளிகளை நடத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற பல நலன்புரி நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
இந்த நடவடிக்கைகளானது, லடாக்கின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது.
இந்திய இராணுவமானது கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதற்காகவும், தற்போது ஏழு இராணுவ நல்லெண்ணப் பள்ளிகளை நடத்தி வருகிறது.
மேலும், பெண்களுக்காக பாஷ்மினா சால்வை நெசவு, கம்பளி பின்னல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.