சத்பாவனா திவாஸ் (வகுப்புவாத நல்லிணக்க தினம்) - ஆகஸ்ட் 20
August 21 , 2019 2213 days 1024 0
இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சத்பாவனா திவாஸ் அல்லது வகுப்புவாத நல்லிணக்க தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
அனைத்து மதங்களையும் சேர்ந்த இந்திய மக்களிடையே தேசிய ஒருங்கிணைப்பு, அமைதி, அன்பு மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப் படுகின்றது.
20 ஆகஸ்ட் 2019 ஆனது ராஜீவ் காந்தியின் 75 வது பிறந்த நாளைக் குறிக்கிறது.