சத்ய பால் மாலிக் – ஒடிசா ஆளுநர் (கூடுதல் பொறுப்பு)
April 8 , 2018 2713 days 968 0
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பீகார் ஆளுநரான சத்யபால் மாலிக்கிற்கு (72) கூடுதலாக ஒடிஸா மாநில ஆளுநர் பொறுப்பை அளித்துள்ளார். இவர் ஒடிஸாவில் புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை இந்த கூடுதல் பொறுப்பைக் கவனிப்பார்.
இதற்கு முன் ஒடிஸாவின் ஆளுநராக SC ஜமீர் இருந்தார். அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐந்து முறை நாகாலாந்து முதலமைச்சராக இருந்த SC ஜமீர் 2013 மார்ச் மாதம் ஒடிஸா மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் இவர் கோவா மற்றும் மஹாராஷ்டிரா மாநில ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.
இவருக்கு 2009 ஆம் ஆண்டு குஜராத் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.