சத்ரா விஸ்வகர்மா மற்றும் சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா விருதுகள்
January 24 , 2019 2370 days 854 0
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் இரண்டாவது சத்ரா விஸ்வகர்மா விருதினை குழந்தைகள் மற்றும் அவர்களது ஆசான்களுக்கு வழங்கினார். மேலும் இவர் சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா விருதுகளை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கினார்.
புதுதில்லியில் அனைத்து இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுவினால் (All India Council for Technical Education - AICTE) நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் போது இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
2-வது சத்ரா விஸ்வகர்மா விருதின் கருத்துருவானது, "தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களை வளர்ச்சி பெறச் செய்தல்" என்பதாகும்.
சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா விருதின் கருத்துருவானது, "வளர்ச்சியடைந்த கிராமங்கள் - வளர்ச்சியடைந்த தேசம்" என்பதாகும்.
கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக புதிய கருத்துகளை வெளியிடும் மற்றும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக சத்ரா விஸ்வகர்மா விருதுகள் வழங்கப்படுகின்றன.
சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா விருதின் கீழ் இராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரி முதல் பரிசினைப் பெற்றுள்ளது.