சந்திரனின் மேற்பரப்பில் செங்கற்களை உருவாக்கும் செயல்முறை
August 23 , 2020 1943 days 787 0
பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மற்றும் இஸ்ரோ ஆகியன இணைந்து சந்திரனின் மேற்பரப்பில் “விண்வெளிச் செங்கற்கள்” எனப் பெயரிடப்பட்ட செங்கல் போன்ற கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு நிலையான செயல்முறையை உருவாக்கியுள்ளன.
இந்தச் செயற்முறையானது விண்வெளிச் செங்கல் தயாரிக்க சந்திரனின் மண், பாக்டீரியா மற்றும் கொத்தவரை (குவார் பீன்ஸ்) ஆகியவற்றைப் பயன்படுத்தியது.
இந்தச் செயல்முறையானது சந்திரனின் மேற்பரப்பில் கட்டுமானத்திற்கான மூலப்பொருட்களாக மனிதச் சிறுநீரில் இருந்து யூரியாவைப் பயன்படுத்துகிறது. மேலும் இது சந்திரனின் மண்ணைப் பயன்படுத்துவதன் மூலம் அதற்கான ஒட்டு மொத்தச் செலவினங்களையும் குறைக்கிறது.