TNPSC Thervupettagam

சந்திரயான் – 2 திட்டம்

July 23 , 2019 2121 days 812 0
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதியன்று இந்தியாவின் மிகவும் வலிமையான செயற்கைக் கோள் செலுத்து வாகனமான ஜிஎஸ்எல்வி மாக் III – எம் 1 சந்திரயான் 2 விண்வெளிக் கலனை, அதன் திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாகச் செலுத்தியது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம் SHAR-ன் 2 வது ஏவு தளத்திலிருந்து இந்தச் செயற்கைக் கோள் செலுத்தப்பட்டது.
  • சந்திரயான் – 2 திட்டம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது.
    • முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுற்று வாகனம் (ஆர்பிட்டர்)
    • லேண்டர் (விக்ரம் என்று பெயரிடப்பட்ட தரையிறங்கும் சாதனம்)
    • ரோவர் (பிரக்யான் என்று பெயரிடப்பட்ட நிலவில் ஆய்வு செய்யும் சாதனம்)
  • இந்த லேண்டர் சாதனம் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 அன்று நிலவில் உள்ள மன்சீனஸ் C மற்றும் சிம்பெலியஸ் N என்ற இரண்டு பள்ளங்களுக்கிடையே ஒரு உயரிய சமவெளிப் பகுதியில் மென்மையான தரையிறக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • லேண்டரின் ஆயுட் காலம் (ஆய்வுக் காலம்) 1 நிலவு நாள் ஆகும். ஆய்வு செய்யும் சாதனம் 14 புவி நாட்களுக்குச் சமமான 1 நிலவு தினத்திற்கு நிலவின் மேற்பரப்பின்போது மீது ஆராய்ச்சியினை வெளியிட்டு ஆய்வுகளை மேற்கொள்ளும்.
  • ஆர்பிட்டர் ஆனது ஓராண்டு காலத்திற்குத் தனது ஆய்வுப் பணியைத் தொடரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்