TNPSC Thervupettagam
May 24 , 2026 16 hrs 0 min 33 0
  • சந்திரயான்-3-இன் “ஹாப் பரிசோதனை” தரவுகளைப் பயன்படுத்தி, ‘சிவ சக்தி’ தரையிறங்கும் தளத்தில் நிலவின் மேற்பரப்பு குறித்த புதிய விவரங்களை அறிவியலாளர்கள் வெளியிட்டனர்.
  • விக்ரம் தரையிறங்கு கலமானது அதன் இயந்திரங்களை மறுதொடக்கம் செய்வதன் மூலம் சந்திர மேற்பரப்பில் இருந்து வெற்றிகரமாக மேலெழுந்ததுடன் இது எதிர்கால மாதிரி-திரும்பப் பெறும் பணிகளுக்கு பயனுள்ள தொழில்நுட்பத்தை நிரூபிக்கிறது.
  • நீண்ட கால நுண்விண்கல் தாக்கங்களால் உருவாக்கப்பட்ட அடுக்கடுக்கான “கேக் / இனிப்புக்கட்டிகை போன்ற” அமைப்புகளை நிலவில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.
  • மேற்பரப்பிற்கு கீழே சந்திரனின் மண் அடர்த்தியாகவும் மிகவும் இறுக்கமாகவும் மாறும் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
  • சந்திரனின் காற்று இல்லாத சூழல் காரணமாக நிலவின் அந்தி வேளையில் ஏற்படும் விரைவான வெப்பநிலை வீழ்ச்சியை சந்திரனின் மேற்பரப்பு வெப்ப இயற்பியல் சோதனை (ChaSTE) பதிவு செய்துள்ளது.
  • சிவ சக்தி புள்ளி என்பது சந்திரனின் தென் துருவப் பகுதிக்கு அருகே சந்திரயான்-3 தரையிறங்கிய தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்