January 4 , 2026
3 days
46
- இந்திய ஏற்றுமதியாளர்கள், உலகளாவியச் சந்தைகளில் நுழைய உதவும் வகையில் இந்திய அரசு சந்தை அணுகல் ஆதரவு (MAS) திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
- இந்தத் திட்டம் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின் (EPM) கீழ் செயல்படுத்தப்படுகிறது.
- இது முதன்மையாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் (MSME) மற்றும் முதல் முறையாக ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை ஆதரிக்கிறது.
- MAS ஆனது வர்த்தக கண்காட்சிகள், கண்காட்சிகள் மற்றும் வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்புகளுக்கு (BSM) நிதி மற்றும் நிறுவன ஆதரவை வழங்குகிறது.
- இந்தத் திட்டம் NIRYAT DISHA துணைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
- இது ஏற்றுமதியின் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பதையும் இந்திய ஏற்றுமதிகளின் உலகளாவிய போட்டித் தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Post Views:
46