காம்பிடேர் அறக்கட்டளை (Competere Foundation) அறிக்கையின்படி, சந்தை விலகல்கள் செயல்திறன் குறியீட்டில் இந்தியா 2010 ஆம் ஆண்டில் 82 வது இடத்திலிருந்து 2023 ஆம் ஆண்டில் 57வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (GST), திவால்நிலை மற்றும் நொடிப்புநிலை சட்டம் (IBC), ஒழுங்குமுறைச் சீர்திருத்தங்கள் மற்றும் வர்த்தக வசதி நடவடிக்கைகள் போன்ற சீர்திருத்தங்களே இந்தியாவின் இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என அந்த அறிக்கை கூறுகிறது.
நாடுகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், உள்நாட்டுப் போட்டி மற்றும் சர்வதேசப் போட்டி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் குறியீடு நாடுகளை மதிப்பிடுகிறது.
இந்தச் சீர்திருத்தங்கள் எளிதாக தொழில் செய்தல், சந்தைப் போட்டி மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளன என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
புது தில்லியில் இந்திய வெளிநாட்டு வர்த்தகக் கழகத்தின் (IIFT) வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சட்ட மையம் (CTIL) மற்றும் காம்பிடேர் அறக்கட்டளை ஆகியவை ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலின் போது இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.