சந்த் குரு ரவிதாஸின் 650 ஆவது பிறந்தநாள் விழாவானது 2026 ஆம் ஆண்டு ஜூலை 29 முதல் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 வரையில் இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நினைவு கூரப்படுகிறது.
குரு ரவிதாஸ் 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இயக்கத் துறவி, கவிஞர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதியான இவர் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள சீர் கோவர்தன்பூரில் பிறந்ததாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது.
அவர் சாதியப் பாகுபாடு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்த அதே வேளையில் சமத்துவம், சமூக நீதி, ஒரே கடவுள் மீதான பக்தி மற்றும் உழைப்பின் கண்ணியம் ஆகியவற்றைப் போதித்தார்.
சீக்கிய மதத்தின் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பில் இவரது பக்திப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
துயரம், பாகுபாடு மற்றும் அநீதியற்ற சிறந்த சமுதாயமான "பேகம்புரா" என்ற கருத்தாக்கத்துடன் இவர் தொடர்புடையவர் ஆவார்.
குரு ரவிதாஸ் ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் மாக பூர்ணிமா (இந்து மாதமான மாக மாதத்தின் பௌர்ணமி நாள்) அன்று அனுசரிக்கப்படுகிறது.