TNPSC Thervupettagam
December 3 , 2025 9 days 69 0
  • விண்வெளியில் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் தரவு மையங்களை உருவாக்கும் சன்கேட்சர் திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
  • பூமியில் பயன்படுத்தப்படும் ஆற்றலையும் நீரையும் சேமிப்பதற்காக இந்தத் தரவு மையங்கள் சூரிய சக்தியில் இயங்கும் செயற்கைக் கோள்களாக செயல்படும்.
  • வினாடிக்குப் பல்லாயிரக்கணக்கான டெராபிட்களில் தரவை மாற்ற அவை வடம் சார்ந்த ஒளியிழை இணைப்புகளைப் பயன்படுத்துகின்றன.
  • விண்வெளி அடிப்படையிலான டென்சர் செயலாக்க அலகு (TPU) வன்பொருளை சோதிக்க 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முன்மாதிரி செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த கூகுள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • விண்வெளி சார் சூரிய மின் உற்பத்தித் தகடுகள் பூமியில் உள்ளதை விட 8 மடங்கு அதிக திறன் கொண்டவையாகும்.
  • ட்ரில்லியம் v6e எனப்படும் TPU என்பது கதிர்வீச்சு எதிர்ப்பு மற்றும் தீவிரச் சூழல்களிலுமான செயல்திறனுக்காக பரிசோதிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்