மொத்தமுள்ள 790 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 252 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனாவின் 4வது நிலையின் கீழ் கிராமப் பஞ்சாயத்துகளைத் தத்தெடுத்துள்ளனர்.
இந்தத் திட்டமானது மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படுகின்றது.
இந்த திட்டமானது 2014 ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த ஆண்டு விழாவின் போது இந்தியப் பிரதமரால் தொடங்கப் பட்டது.
இந்தத் திட்டம் பற்றி
இது ஒரு கிராம மேம்பாட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் 2019 ஆம் ஆண்டிற்குள் தலா மூன்று கிராமங்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்குள் மொத்தம் எட்டு கிராமங்கள் ஆகியவற்றின் சமூக - பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உருவாக்குவதற்கும் பொறுப்பு மிக்கவர்களாவர்.
முதலாவது ஆதர்ஷ் கிராமமானது (மாதிரிக் கிராமம்) 2016 ஆம் ஆண்டிற்குள் உருவாக்கப்பட வேண்டும். மேலும் இரண்டு கிராமங்கள் 2019 ஆம் ஆண்டிற்குள் உருவாக்கப்பட வேண்டும்.
2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிராமம் என்ற அளவில் மேலும் ஐந்து ஆதர்ஷ் கிராமங்களை உருவாக்க வேண்டும்.