பதினேழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் சிறந்தச் செயல்திறனுக்காக புது டெல்லியில் 2025 ஆம் ஆண்டு சன்சத் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விருதுகளில், தொடர்ச்சியாக மூன்று முறை பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு அவர்களின் நிலையான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்ட நான்கு சிறப்பு தேர்வு மன்ற/ஜூரி விருதுகளும் அடங்கும்.
2025 ஆம் ஆண்டு விருது பெற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த C.N. அண்ணாதுரை (திமுக) அவர்களும் ஒருவர் ஆவார்.
இந்த விருதுகள் அரசு சாரா அமைப்பால் வழங்கப்பட்டுள்ளன.
டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனையின் பேரில், இந்த விருதுகள் 2010 ஆம் ஆண்டு பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை மற்றும் பிரசென்ஸ் இணைய இதழ் ஆகியவற்றால் நிறுவப்பட்டன.
மேலும், டாக்டர் கலாம் அவர்கள் 2010 ஆம் ஆண்டு மே மாதத்தில் சென்னையில் அதற்கான முதல் விருது வழங்கும் விழாவைத் தொடங்கி வைத்தார்.
குறிப்பாக, இந்த விருதைப் பெற்ற முதல் நபர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் ஆவார்.