சன்சத் ரத்னா விருதுகள் 2026-க்காக 10 மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 நாடாளுமன்ற நிலைக்குழுக்களை நடுவர் குழு தேர்ந்தெடுத்துள்ளது.
கேள்விகள், விவாதங்கள், தனிநபர் மசோதாக்கள், குழுப் பணிகள் மற்றும் வருகை ஆகியவற்றின் அடிப்படையில் நாடாளுமன்ற செயல்பாடுகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.
பி.பி. சவுத்ரி நான்காவது முறையாக இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
12 தனிநபர் விருது பெற்றவர்களில் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்குவர்.
வேளாண்மை, நிதி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் ஆகிய நான்கு குழுக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உந்துதலால், பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் 2010 ஆம் ஆண்டில் சன்சத் ரத்னா விருது தோற்று விக்கப் பட்டது.