நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் சிறந்த செயல்பாட்டைக் கௌரவிப்பதற்காக 2026 ஆம் ஆண்டிற்கான சன்சத் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விருதுகளானது அவர்களின் நாடாளுமன்ற செயல்பாட்டிற்காக 10 மக்களவை உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் 4 நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு வழங்க அங்கீகாரம் அளித்துள்ளன.
முக்கிய விருது பெற்றவர்களில் ஸ்மிதா உதய் வாக், மேதா குல்கர்னி, ஜெகதாம்பிகா பால் மற்றும் நிஷிகாந்த் துபே ஆகியோர் அடங்குவர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் தூண்டுதலால், பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் 2010 ஆம் ஆண்டில் இந்த விருது தோற்றுவிக்கப் பட்டது.
விவாதங்கள், கேள்விகள், வருகைப்பதிவு, குழு பங்கேற்பு மற்றும் தனிநபர் மசோதாக்கள் போன்ற அதிகாரப்பூர்வ நாடாளுமன்றத் தரவுகளின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப் படுகின்றன.