TNPSC Thervupettagam

சபைக் குழுக்களின் பதவிக் காலம்

July 19 , 2022 1065 days 468 0
  • மாநிலங்களவைச் செயலகத்தின் முதல் விரிவான ஆய்வானது தனது பரிந்துரைகளை அவைத் தலைவரிடம் அளித்துள்ளது.
  • முன்னாள் பொதுச் செயலாளரும் ஆலோசகருமான P.P.K. ராமச்சார்யுலு தலைமையிலான இந்தக் குழு இந்தப் பரிந்துரைகளை வழங்கியது.
  • பாராளுமன்றக் குழுக்கள், சபையால் நியமிக்கப்பட்டவை அல்லது தேர்ந்தெடுக்கப் பட்டவை அல்லது சபாநாயகர் / தலைவரால் பரிந்துரைக்கப் பட்டவை ஆகும்.
  • இவை சபாநாயகர் / அவைத் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகின்றன.

பரிந்துரைகள்

  • உறுதித்தன்மை மற்றும் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக பாராளுமன்ற நிலைக் குழுக்களின் பதவிக்காலம் ஆனது 1 வருடத்தில் இருந்து 2 வருடங்களாக அதிகரிக்கப் பட வேண்டும்.
  • தற்போது ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 10 நாட்கள் அளவிலான கள ஆய்வானது இரண்டு வருகைகளில் இருந்து 15 நாட்கள் அளவிலான மூன்று வருகைகளாக அதிகரிக்கப் பட வேண்டும்.
  • தொழில் மற்றும் வர்த்தகம் மீதான தற்போதைய குழுக்களை ஒன்றிணைத்தல்.
  • சுற்றுலா மற்றும் கலாச்சாரம் தொடர்பான ஒரு புதிய குழுவை அமைத்தல்.
  • மற்ற நாடுகளில் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சட்டமன்றங்களின் அடிப்படையில், துறை சார்ந்த நிலைக்குழுக்களின் காணொளி வாயிலானச் சந்திப்புகளுக்கு வழிவகை செய்வதில் உள்ள சிக்கலை ஆய்வு செய்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்