TNPSC Thervupettagam

சப்கா பீமா சப்கி ரக்சா மசோதா 2025

December 20 , 2025 14 hrs 0 min 45 0
  • மக்களவை ஆனது 2025 ஆம் ஆண்டு சப்கா பீமா சப்கி ரக்சா (காப்பீட்டுச் சட்டத் திருத்தம்) மசோதாவினை நிறைவேற்றியது.
  • இந்த மசோதா காப்பீட்டுச் சட்டம், 1938, ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டம், 1956 மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம், 1999 ஆகியவற்றைத் திருத்தியமைக்கிறது.
  • இது காப்பீட்டுத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் காப்பீட்டுக் கொள்கை மேற்கொள்பவர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மசோதா நடைமுறையை எளிதாக்குதல், வெளிப்படைத்தன்மை மற்றும் காப்பீட்டில் ஒழுங்குமுறை மேற்பார்வை ஆகியவற்றை மேம்படுத்த முயல்கிறது.
  • அரசாங்கம் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் 17,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளது மற்றும் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்புகளை அதிகரித்து உள்ளது.
  • இந்த மசோதா பிரதான் மந்திரி (PM) ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா போன்ற திட்டங்கள் மூலம் ஒரு பரந்த காப்பீட்டுத் திட்டத்தை ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்