சமத்துவமின்மை அறிக்கை 2021 : இந்தியாவின் சமத்துவமற்ற சுகாதார நலத்தின் கதை
July 22 , 2021 1474 days 599 0
இது ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் ஒரு அறிக்கையாகும்.
இந்த அறிக்கையானது பொதுச் சுகாதார முறையில் செய்யப்படும் குறைவானச் செலவினமானது சுகாதார நலனை அணுகுவதில், குறிப்பாக தொற்றுநோய் காலங்களில் எவ்வாறு சமத்துவமின்மைக்கு வழிவகுத்தது என்பதைப் பற்றி எடுத்துரைக்கிறது.
கோவிட்-19 பெருந்தொற்றினைச் சிறப்பாகக் கையாள்வதில் கேரள மாநிலத்தை ஒரு வெற்றிகரமான மாநிலமாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 தொற்றுகள் குறைவான அளவே பதிவாகியுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
அந்த மாநிலங்கள் கடந்த சில வருடங்களில் பட்டியலினப் பிரிவினர், பட்டியலினப் பழங்குடியினர் மற்றும் பொதுப் பிரிவு மக்கள்தொகையினர் ஆகியோரிடையே சுகாதாரத் துறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து வருகின்றன.
அதே சமயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்கு அதிக செலவினத்தை ஒதுக்கியுள்ள அசாம், பீகார் மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் கோவிட் தொற்றிலிருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை வீதம் அதிகமாக உள்ளது எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான குடும்பங்களே அரசின் காப்பீட்டுத் திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் சுகாதாரத்திற்காக தனிநபர் ஒருவர் தமது கையில் இருந்து செய்யும் செலவு வீதமானது (64.2%) உலகச் சராசரியை விட அதிகமாகும்.