சட்டவிரோத மத மாற்றங்களைத் தடுக்க சத்தீஸ்கர் அரசு 'சமயச் சுதந்திர மசோதா 2026' என்ற மசோதாக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதா கட்டாயப்படுத்துதல், மோசடி, தூண்டுதல் (நிதிச் சலுகைகள் உட்பட) அல்லது தேவையற்றச் செல்வாக்கு மூலம் செய்யப்படும் மத மாற்றங்களைத் தடை செய்கிறது.
இது அனைத்து மதங்களுக்கும் பொருந்துவதுடன் மத மாற்றங்கள் தானாக முன்வந்து நடப்பதை உறுதி செய்கிறது என்பதோடு தடையை மீறி செயல்படுபவர்கள் சட்டப்படி தண்டிக்கப் படுவார்கள்.
இந்த மசோதா இந்திய அரசியலமைப்பின் 25-28 ஆகிய சரத்துகளுடன் இணங்கிச் செல்கிறது.