சமஸ்கிருத மொழியில் வெளியாகும் முதல் அறிவியல் ஆவணப்படம்
December 2 , 2022 993 days 548 0
கோவாவில் நடைபெற்ற 53வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் திரைக் காட்சிப் பிரிவின் கீழ் யாணம் என்ற பெயரிடப்பட்ட 40 நிமிட ஆவணத் திரைப்படம் (non-feature) ஆனது திரையிடப்பட்டது.
45 நிமிடங்கள் வரை திரையாகும் இந்த ஆவணப்படத்தின் முழுக் கதை மற்றும் உரையாடல்கள் பண்டைய மொழியான சமஸ்கிருத மொழியில் உள்ளதால் இது முழுக்க முழுக்க ஒரு சமஸ்கிருத மொழியிலான திரைப்படமாகும்.
இது முன்னாள் விண்வெளித் தலைவர் டாக்டர் K. ராதாகிருஷ்ணன் அவர்களின் சுயசரிதைப் புத்தகமான “My Odyssey: Memoirs of the Man Behind the Mangalyaan Mission” என்ற புத்தகத்தினை அடிப்படையாகக் கொண்டது.
இந்தியாவின் கனவுத் திட்டமான செவ்வாய்க் கிரக சுற்றுக் கலன் திட்டத்தினை (மங்கள்யான்) இந்தப் படம் சித்தரிக்கிறது.