சமி, ஃபாரஸ்ட் ஃபின்ஸ் மற்றும் க்வென்ஸ் பழங்குடியினர்
November 23 , 2024 239 days 238 0
சிறுபான்மைக் குழுக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளுக்காக நார்வே நாடாளுமன்றம் மன்னிப்புக் கோரியுள்ளது.
ஸ்டார்டிங் எனப்படும் நார்வே நாடாளுமன்றமானது சமி, க்வென்ஸ் மற்றும் ஃபாரஸ்ட் ஃபின்ஸ் இனத்தவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
நார்வே அரசினால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளில் சிறுபான்மை மொழிகளை தடை செய்த நிலையில் அரசானது 18 ஆம் நூற்றாண்டில் சில முழு கிராமங்களையும் வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்ததோடு இது 1851 ஆம் ஆண்டு முதல் அதிகாரப் பூர்வ கொள்கையாகவே மாறியது.
சமி மக்கள் நார்வே, சுவீடன், பின்லாந்து மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் பாரம்பரியமாகவே கலைமான் மேய்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில்களைச் செய்பவர்கள்.
க்வென்ஸ் பழங்குடியினர் வடக்கு நார்வேயில் பின்லாந்து வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சிறுபான்மை இனத்தவர் ஆவர்.
அவர்கள் வரலாற்று ரீதியாக வலுக்கட்டாய ஒருங்கிணைப்பிற்கும், தங்களின் மொழி இழப்பிற்கும் உள்ளாக்கப்பட்டனர்.
ஃபாரஸ்ட் ஃபின்ஸ் என்பது பின்லாந்தைச் சேர்ந்த, நார்வே மற்றும் சுவீடன் நாடுகளில் குடியேறிய சிறுபான்மைக் குழுவாகும்.
அவர்கள் பயிர்த் தாளடி எரிப்பு வேளாண்மை முறையினைக் கடைபிடித்தனர் என்ற ஒரு நிலையில் இவர்கள் பின்னர் ஒருங்கிணைப்புக் கொள்கைகளால் விளம்புநிலை பிரிவினர் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.